Mnadu News

ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற வாலிபர்! தற்கொலை! நடந்தது என்ன ?

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஏரி வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 27 வயதான ராஜேஷ் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் கடன் வாங்கும் செல்போன் செயலி ஒன்றில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும், அவர் வாங்கிய கடன் தொகை முழுவதையும் திருப்பி செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

என்ன தான் கடன் தொகையை அவர் முறையாக செலுத்தி இருந்தாலும், கூடுதலாக 15000 தர சொல்லி பல விதங்களில் மிரட்டி உள்ளனர். மேலும் ஒரு படி மேலே சென்று அவரது புகைப்படத்தை நிர்வாணமாக்கி ராஜேஷ் போல மார்ஃபிங் செய்து அதனை அவரது செல்போனுக்கு அனுப்பி பணத்தை திருப்பித் தரவில்லை என்றால் அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக கூறி கடும் மன வேதனைக்கு ஆளாக்கி உள்ளனர்.

மேலும் தனது புகைப்படத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில் திடீரென பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவரது உறவினர்கள் உடனடியாக அவரை தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் ராஜேஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வலங்கைமான் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் செயலி மூலம் பணம் பெற்று அதில் ஏற்படும் மன உளைச்சலில் இறப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், தமிழக அரசு இதற்க்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Share this post with your friends