தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களைக் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த இரண்டு மாதமாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வந்த நிலையில், தற்போது சில வாரங்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது.இந்நிலையில், பிப்ரவரி 25ம் தேதி காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.25 குறைந்து, ரூ.5,210ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.41,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேசமயம், வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 90 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.70 ஆகவும், ஒரு கிலோ ரூ.900 குறைந்து ரூ.70,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.ூகடந்த 2-ஆம் தேதி தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் ஒரு சவரம் ரூ.44,040-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிற்றுந்து, பெண்களுக்கான கிளினிக்குகள் :டெல்லி பட்ஜெட்டில் அறிவிப்பு.
டெல்லி சட்டப்பேரவையில் 2023-24-ஆம் ஆண்டுக்கான 78 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான...
Read More