ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் சகோதரி ஷர்மிளா, தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை நடத்தி வருகிறார்.,தெலுங்கானாவில் மெஹ்புபாபாத் நகரில் மீடியாக்களுக்கு அளித்த பேட்டியில் ஷர்மிளா கூறுகையில், டி,சந்திரசேகரராவ் சர்வாதிகாரி. கொடுங்கோலனாக உள்ளார். இங்கு, இந்திய அரசியல்சாசனம் அமலில் இல்லை. சந்திரசேகரராவின் சாசனம் தான் உள்ளது. இந்தியாவின் ஆப்கானிஸ்தானாக தெலுங்கானா உள்ளது. அதன் தலிபானாக சந்திரசேகர ராவ் உள்ளார். என்று அவர் கூறினார். முன்னதாக இங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் தொகுதி எம்.எல்.ஏ.,வை கடுமையாக விமர்சித்து பேசினார். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை எனக்கூறினார். இதனையடுத்து அவர் மீது போலீசார் பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை கைது செய்து ஹைதராபாத்திற்கு அழைத்து சென்றனர். ஷர்மிளாவை கண்டித்து சந்திரசேகர ராவ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஷர்மிளாவின் கொடும்பாவியை எரித்ததுடன் , ‘மாநிலத்தை விட்டு வெளியேறு ‘ என கோஷம் போட்டனர்.

முடங்கிப்போன நாடாளுமன்றம்: ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இரு அவைககளும் ஒத்திவைப்பு.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது பாதி...
Read More