Mnadu News

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு தொடரும் கட்டுப்பாடுகள்! தாலிபான்கள் அட்டூழியம்!

ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வருட காலமாக தாலிபான்களின் சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது. இதனால் ஆண்கள் பெண்கள் என இருவருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆடை கட்டுப்பாடு, துணையின்றி செல்ல தடை, கல்வி கற்க தடை போன்றவை பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன.

தற்பொழுது பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல புதிய தடை அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக ஆண்களும், பெண்களும் ஒரே நாளில் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தடை விதித்த தலீபான்கள் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களை ஆண்களுக்கும், மற்ற நாட்களை பெண்களுக்கும் என ஒதுக்கியிருந்தனர்.

Kabul: Taliban fighters take control of Afghan presidential palace after the Afghan President Ashraf Ghani fled the country, in Kabul, Afghanistan, Sunday, Aug. 15, 2021. Person second from left is a former bodyguard for Ghani. AP/PTI(AP08_16_2021_000201B)

அதேபோல் பெண்கள் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வதற்கும் தடைவிதிக்கப்படுவதாக தலீபான்கள் அறிவித்துள்ளனர். இதனால் தாலிபான் நாட்டு பெண்கள் மிகவும் கலக்கத்தில் உள்ளனர்.

Share this post with your friends