Mnadu News

ஆப்கானிஸ்தானில கடும்; குளிருக்கு 2 லட்சம் கால்நடைகள் பலி: நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை அமைச்சகம் தகவல்.

தலிபான் தலைமையிலான விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ஆப்கானிஸ்தானின் 20 மாகாணங்களில் 2,60,000 கால்நடைகள் பலியாகி உள்ளன. இதில், 1,29,000 ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள்” என்றும், பலியான கால்நடைகள் பெரும்பாலும் வடக்கு மாகாணங்களான பால்க், ஜாவ்ஜான் மற்றும் பஞ்ச்ஷிர் ஆகிய பகுதிகளைச் சார்ந்தவை என்று கூறியுள்ளார்.சில விவசாயிகள் குளிர்ந்த காலநிலை மற்றும் உணவுப் பொருள்கள் பற்றாக்குறையால் தங்கள் கால்நடைகளை கொன்றதாகவும், இது தொடர்பாக தலிபான்களிடம் உதவி கோரியுள்ளனர்.
இது குறித்து விவசாயி முகமது நயீம் கூறுகையில், 60 ஆடுகளை வைத்திருந்த நான் குளிர் மற்றும் உணவுப் பொருள்கள் இல்லாததால் 30 ஆடுகளை இழந்துள்ளேன். “குளிர்காலத்தில் குளிர்ந்த காலநிலையால் கால்நடைகளை இழந்து வருவருவதாக” அவர் கூறினார்.மோசமான வாழ்க்கை நிலைமைகளுக்கு மத்தியில், காபூலில் உள்ள உள்ளூர் மக்களும் உறைபனிக்கு மத்தியில் தொடர் மின்வெட்டால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளதாக தங்கள் விரக்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
நாட்டின் மனிதாபிமான செயல்களுக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் பல தொண்டு நிறுவனங்கள் தங்களது நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளதால் ஆப்கானிஸ்தானில் கடும் குளிருக்கு கடந்த ஒரு வாரத்தில் ஏராளமான மக்கள் பலியாகி உள்ளனர்.

Share this post with your friends