ஆம்பூரை அடுத்த சின்னவரிக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஷ_ தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டு தொடர்ந்து 3 நாட்கள் எரிந்தது. அதில் கோடிக்கணக்கான மதிப்புள்ள எந்திரங்கள், ஷ_ தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த நிலையில் அதே ஷ_ கம்பெனியில் நேற்று ஒரு குடோனில் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. ஊழியர்கள் வெல்டிங் மூலம் குடோனை சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த கெமிக்கலில் தீ பிடித்து மளமளவென குடோன் முழுவதும் பரவி விண்ணை தொடும் அளவிற்கு கரும்புகை எழுந்தது. எரிந்துநாசம் தீ விபத்தை கண்ட ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு தொழிற்சாலையில் இருந்து வெளியே ஓடினர். உடனடியாக அங்கிருந்தவர்கள் இது குறித்து ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கும், உமராபாத் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான ஷ_ தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து உமராபாத் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More