Mnadu News

ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டி.

மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக மதச்சார்பற்ற கூட்டணியை முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் அமைத்து வருகிறது.  இதற்காக மாநிலக் கட்சிகளை கூட்டணியில் இணைக்க முயற்சி செய்து வருகிறது.

அந்தவகையில் டெல்லியில் ஆட்சியிலுள்ள ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க பேசி வந்தது. ஆம் ஆத்மி கேட்ட தொகுதிகளை காங்கிரஸ் தர மறுத்துவிட்டது. இதனால் வருகிற நாடாளுமன்றத் தேர்தலை தனித்து எதிர்கொள்ளப் போவதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தனது கூட்டணி பலத்தை காங்கிரஸ் இழந்து வருகிறது. ஏற்கனவே முக்கிய மாநிலக் கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உட்பட சிலக் கட்சிகள் தனித்து மக்களவைத் தேர்தலைச் சந்திக்க ஆயத்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends