கடந்த அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளன்று தமிழகத்தில் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிருந்த நிலையில் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.பின்னர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வருகிற நவம்பர் மாதம் 6 ஆம் தேதி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, நவம்பர் மாதம் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி அளித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதோடு, தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளை கருத்தில் கொண்டு பேரணிக்கு அனுமதி அளிக்குமாறு அந்தந்த மாவட்ட காவல்துறைக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More