Mnadu News

‘ஆற்றலை மடைமாற்றுங்கள் ஒபாமா’: அமெரிக்க மதச் சுதந்திர ஆணைய முன்னாள் தலைவர் பதிலடி.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, “இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு பிரச்சினை குறித்து பிரதமர் மோடியுடன் ஜோ பைடன் பேச வேண்டும். மோடியுடன் நான் பேசியிருந்தால், இதுகுறித்து விவாதித்திருப்பேன்” என்று கூறியிருந்தார்.இதற்கு இந்தியாவில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், சர்வதேச மதச் சுதந்திரங்களுக்கான அமெரிக்க ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஜானி மூர் அவருடைய கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.அதில், “முன்னாள் அதிபர் ஒபாமா தனது ஆற்றலை இந்தியாவை விமர்சிப்பதற்குப் பதிலாக இந்தியாவை பாராட்டப் பயன்படுத்தலாம். மனிதகுல வரலாற்றில் இந்தியா பன்முகத்தன்மை கொண்டநாடு. இந்தியா நேர்த்தியான நாடாக இல்லாமல் இருக்கலாம். அமெரிக்காவும் கூட. ஆனால் இந்தியாவின் பன்முகத்தன்மைதான் அதன் வலிமை. எனவே இந்த உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நாம் பாராட்ட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Share this post with your friends