Mnadu News

ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு திமுக கடிதம்.

தமிழக அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ந்து தமிழக அரசை விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பவுள்ளதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிவிப்பில், திமுக மற்றும் ஒற்றைக் கருதுடைய கட்சிகள் நாளைக்குள் திமுக அலுவலகத்திற்கு வந்து ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு அனுப்பவுள்ள கடிதத்தில் கையெழுத்திட அழைப்பு விடுத்துள்ளார்.

Share this post with your friends