Mnadu News

இசை அமைப்பாளராகும் “இயக்குநர் மிஷ்கின்”! ஆச்சரியத்தில் ரசிகர்கள்! யார் அந்த இயக்குநர் தெரியுமா?

“சித்திரம் பேசுதடி” படத்தின் வாயிலாய் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் மிஷ்கின். தொடர்ந்து எந்த சமரசமும் செய்யாமல் தரமான படைப்புகள் மட்டும் அவரிடம் இருந்து வருகிறது எனலாம்.

தொடர்ந்து அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், முகமூடி, நந்தலாலா, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என அவர் எடுத்த ஒவ்வொரு படங்களும் மணி மகுடம் என்றே சொல்லலாம்.

மிக விரைவில் பிசாசு 2 வெளியாக உள்ள நிலையில், அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதற்குள் அனைவரையும் அசரடிக்கும் ஒரு அறிவிப்பு அண்மையில் வெளியாகி உள்ளது. மிஷ்கின் ஒரு இசை வெறியன் என அனைவருக்கும் தெரியும்,

தற்போது “டெவில்” எனும் படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆக உள்ளார். “சவரக்கத்தி” படத்தின் இயக்குனர் “ஆதித்யா” இயக்க உள்ள படத்தில் தான் இவர் இசையமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends