இசைப்புயல் ஆஸ்கர் நாயகன் ரஹமான் 1992 ஆம் ஆண்டு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து படங்கள், விளம்பரங்கள் மட்டுமில்லாமல் தனி பாடல்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு சமூக அமைப்புகளுக்கு நிதி ஏற்படுத்தி தருவார். இப்படி இசையில் தான் என்னென்ன செய்ய முடியுமோ அவை எல்லாம் சத்தமே இல்லாமல் செய்து வருகிறார் ரஹமான். இந்த நிலையில் ஆகஸ்ட் 12 அன்று நடக்கவிருந்த இசை நிகழ்ச்சி மழையால் ரத்து ஆனது. இதனால், பாதுகாப்பாக இருப்பதே முக்கியம் என்று கூறி வேறொரு நாளில் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், “மறக்குமா நெஞ்சம்” இசை நிகழ்ச்சி நடைபெறும் புதிய தேதியை ஏ.ஆர்.ரகுமான் அறிவித்துள்ளார். அதன்படி, சென்னை பனையூரில் செப்டம்பர் 10 ஆம் தேதி இந்த இசை நிகழ்ச்சி நடைபெறும் என்றும் முன்னதாக பெற்ற டிக்கெட்டுக்களை பயன்படுத்தி நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்றும் அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த அப்டேட்டால் இசைப் புயல் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
மேலும், இந்த வருடம் மற்றும் வரும் வருடங்களில் இசைப் புயல் இசையில் பல படங்கள் அவை, கமல் 234, வெந்து தணிந்தது காடு பார்ட் 2, தனுஷ் 50, அயலான், லால் சலாம், விண்ணை தாண்டி வருவாயா பார்ட் 2 போன்று பல படங்கள் லைன் அப்பில் உள்ளன.