விழுப்புரம் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு தனிக் கட்டடம் இல்லாத நிலையில், விழுப்புரம் நான்குமுனை சாலை சந்திப்பு அருகே 1960- ஆம் ஆண்டில் கட்டப்பட்ட மேற்கு காவல் நிலைய வளாகத்தில் உள்ள பழைமையான கட்டடத்தில் கடந்த 6 ஆண்டுகளாக போக்குவரத்துக் காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த கட்டடத்தின் ஒரு பகுதி கடந்த வியாழக்கிழமை அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது.

மேலும் விழுப்புரம் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மாவட்டக் காவல் நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது போக்குவரத்து காவல் நிலையம் தற்காலிகமாக விழுப்புரம் நகர காவல் நிலைய வளாகத்தில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுளளது.