“அண்ணாத்த” பட பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு சூரியா சிறுத்தை சிவா கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் சூரியா 42. இதில் கதாநாயகியாக திஷா பதானி நடிக்கிறார். 3டி பணியில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. ஐந்து ரோல்களில் சூரியா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் படப்பிடிப்பு காட்சிகளை திருட்டுத்தனமாக படம் பிடித்து இணைய தளங்களில் வெளியிடுவதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இதுகுறித்து பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சூரியா 42 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில மர்ம நபர்கள் வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர். இந்த படத்தை பிரமாண்டமான முறையில் திரையரங்க அனுபவமாக கொடுக்க விரும்புகிறோம். எனவே பகிரப்பட்ட வீடியோக்கள் புகைப்படங்களை நீக்கினால் உதவியாக இருக்கும்.
மேலும் இதுபோன்று வீடியோ புகைப்படங்களை பகிரவேண்டாம் என்றும், மீறி செய்தால் காப்புரிமையின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.