25 ஆண்டுகளை கடந்து கூட சுந்தர் சி தனது வெற்றி நடையை தொடர்ந்து வருகிறார். அது தான் அவர் படங்களின் வெற்றி ரகசியம். தற்போதும் அவரது படங்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டமும், வரவேற்பும் உள்ளது.
காலங்களும், தொழில்நுட்பமும் எவ்வளவு மாறினாலும் அதற்கு டஃப் கொடுக்கும் விதமாக இவரின் படங்கள் இருக்கும். எப்போதுமே, தன்னை மாற்றிக்கொண்டு நகைச்சுவையில் புதுப்புது யுக்திகளை கையாளுவது சுந்தர்.சியின் ஸ்டைலில் ஒன்று. அதேபோல சுந்தர்.சியின் படங்களில் ஹீரோக்களுக்கு இணையாக நகைச்சுவை நடிகர்களின் கதாபாத்திரமும் பேசும் அளவுக்கு டிசைன் செய்யப்பட்டிருக்கும்.
குடும்பம் குடும்பமாக இவரின் படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உண்டு எனலாம். அப்படி, மணிவண்ணன் படங்களை போல் நல்ல நகைச்சுவை கட்சிகள் இடம்பெறும் இவர் படங்களில். என்ன தான் சில படங்கள் தோல்விகளை தந்தாலும் தொடர்ந்து இயங்கி கொண்டு வருகிறார் இவர்.
தற்போது, “காஃபி வித் காதல்” படத்தின் ட்ரெய்லர் வெளியாகி யூடியூப்பில் டிரெண்ட் ஆகியுள்ளது. இந்தப் படத்தில், ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா, உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. டிரெய்லர் லிங்க் : https://youtu.be/TeV1FNneuXg