பிரம்மாண்ட இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் படம் “ஜவான்”. முதல் பார்வை வெளியானது முதல் படம் எப்படிவர போகிறது என ஷாருக் கான் ரசிகர்கள் ஆவல் பூக்க துவங்கினர். அப்படி ஒரு மாஸ் ரிசப்ஷன் இந்த படாதுக்கு உருவாகி உள்ளது.

ஜவானில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதுவே பலருக்கு வியப்பை வாரித் தெளித்தது. மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 250 கோடி செலவீட்டில் உருவாகி உள்ளது ஜவான். இந்த நிலையில் இதன் இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை 400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இப்படத்தின் இசை உரிமத்தை T-SERIES நிறுவனம் சுமார் 36 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது. முன்னமே இதன் முன்னோட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஷாருக்கான் அறிமுகமாகும் ‘ஜிந்தா பந்தா’ என்ற பாடலில் அவர் 1,000 பெண் நடனக் கலைஞர்களுடன் நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், தற்போது இந்த பாடல் அனைத்து மொழிகளிலும் வெளியாகி உள்ளது. ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து பாடியுள்ள பாடலை, தமிழில் விவேக் எழுதி உள்ளார். “வந்த இடம் ” என்கிற பாடல் இணையத்தில் கணிசமான வரவேறப்பை பெற்றுள்ளது.