சுராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் வைகை புயல் வடிவேலு லீட் ரோலில் நடித்து வரும் படம் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” . இப்படத்துக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்து உள்ளனர்.
இவரோடு சிவாங்கி, புகழ், யூடியூபெர் பிரசாந்த் போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் இருந்து வந்த நிலையில், நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.
“அப்பத்தா” என்று அந்த பாடலை வடிவேலு பாட, நடன ஜாம்பவான் பிரபு தேவா நடனம் அமைக்க, துரை, அசல் கோளாறு எழுதி உள்ளனர். இப்பாடல் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
சாங் லிங்க்: https://youtu.be/N-pvp7GSD3Y