Mnadu News

இதயப்பூர்வமாக உதவி செய்யுங்கள்: மோடிக்கு ஜெகன்மோகன் கோரிக்கை.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மத்திய அரசுடனும், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் நல்லிணக்கமாக செயல்பட்டு, மாநிலத்துக்குத் தேவையான உதவிகளைக் கேட்டுப் பெற்று வருகிறார். அந்த வகையில் ஆந்திர மாநிலத்துக்கு இன்று வருகை தந்து, பல நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடியுடன்; விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்; ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில்; பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, அரசியல் மற்றும் கட்சியையும் தாண்டியது நமது நட்பு. தனது ஒரே கொள்கை மாநிலத்தின் வளர்ச்சியே தான். வேறொன்றும் இல்லை. எனது மாநில மக்கள் மற்றும் மாநிலத்தின் நன்மை குறித்து மட்டுமே எனது கொள்கை அமைந்திருக்கும். இதைத் தவிர்த்து வேறு எந்தக் கொள்கைகளும் கிடையாது என்றார்.அதோடு, மாநிலத்தை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாகப் பிரித்த போது ஏற்பட்ட ஏற்பட்ட காயங்கள் (பிரச்னை) இன்னமும் ஆறாத வடுக்களாகவே உள்ளன. எனவே, பெரிய இதயத்துடன் அந்த பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.சிறப்பு அந்துஸ்து, விசாகப்பட்டினம் இரும்பாலை, ரயில்வே மண்டலம் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருப்பதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி குறிப்பிட்டிருந்தார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More