Mnadu News

இத்தனை கோடிகளை வசூல் செய்துள்ளதா நானே வருவேன்? வெளியான பாக்ஸ் ஆபிஸ் ரிபோர்ட்!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், இந்துஜா, பிரபு ஆகியோர் நடிப்பில் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாஸிடிவ் விமர்சனங்களை அள்ளி வரும் படம்
“நானே வருவேன்”.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள், பின்னணி இசை என அனைத்தும் பேசப்பட்டு வருகிறது. அதே போல படத்தின் கதை, ஒளிப்பதிவு என அனைத்தையும் கச்சிதமாக கலந்து கொடுத்துள்ளது படக்குழு.

தற்போது, படத்தின் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. பெரிய புரொமோஷன் செய்யாத நிலையிலும் படத்துக்கு எல்லா பக்கங்களில் இருந்தும் சிறந்த விமர்சனமே கிடைத்துள்ளது. சுமார் 13 கோடிகள் வரை இப்படம் வசூல் செய்துள்ளது.

ஆனாலும், தற்போது பொன்னியின் செல்வன் படம் வந்துள்ளதால் இதன் வசூல் பாதிக்கப்பட்டாலும் இன்னும் ஓரளவுக்கு இப்படம் வசூல் செய்துவிடும் என திரை அரங்க உரிமையாளர்கள் தரப்பு தெரிவித்து உள்ளது.

Share this post with your friends