Mnadu News

இத்தாலியில் விமான நிலைய ஊழியர்களின் வேலைநிறுத்ததால் கடும் பாதிப்பு!

இத்தாலியில் ஊதிய உயர்வு , ஒப்பந்தம் நீட்டிப்பு போன்றவற்றை வலியுறுத்தி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் ரோம், வெனிஸ், மிலன் நகரங்களின் விமான நிலையங்களில் உள்நாட்டு, வெளிநாட்டு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய முடியாமல் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள் அதிகமாகக் கூடும் ரோம், வெனிஸ் போன்ற நகரங்களில் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் சுற்றுலாவை நம்பி தொழில் செய்பவர்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில், ரோம் நகரில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட விமானங்களும் மிலன் நகரில் 150-க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அந்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறும்போது, “விமான நிலைய பணியாளர்கள் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளையும், மக்களையும் சிரமப்படுத்தாமல் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்றார்”.



Share this post with your friends