Mnadu News

இந்தியக் குடியுரிமையை 16 லட்சம் பேர் துறந்துள்ளனர்: அமைச்சர் தகவல்.

மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த 2011 ஆம் ஆண்டில் 1,22,819 பேரும், 2012 ஆம் ஆண்டில் 1,20,923 பேரும், 2013 ஆம் ஆண்டில் 1,31,405 பேரும், 2014 ஆம் ஆண்டில் 1,29,328 பேரும் தங்களது இந்தியக் குடியுரிமையைத் துறந்துள்ளனர். 2105 ஆம் ஆண்டில் 1,31,489 பேரும், 2016 ஆம் ஆண்டில் 1,41,603 பேரும், 2017 ஆம் ஆண்டில் 1,33,049 பேரும் தங்களது குடியுரிமையை துறந்துள்ளனர். இந்தியக் குடியுரிமையை 2018 ஆம் ஆண்டில் 1,34,561 பேரும், 2019 ஆம் ஆண்டில் 1,44,017 பேரும், 2020 ஆம் ஆண்டில் 85,256 பேரும், 2021 ஆம் ஆண்டில் 1,63,370 பேரும் துறந்துள்ளனர். 2022 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2,25,620 ஆக உள்ளது. இதன் மூலம் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்தமாக 16,63,440 இந்தியர்கள் தங்களது இந்தியக் குடியுரிமையை துறந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் 5 இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியுரிமையைப் பெற்றுள்ளனர். மேலும், இந்தியர்கள் குடியுரிமை பெற்றுள்ள 135 நாடுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Share this post with your friends