லைக்கா பிரம்மாண்ட தயாரிப்பில் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வருகிறது இந்தியன் 2 படம். அனிருத் முதல் முறையாக இயக்குநர் ஷங்கர் உடன் கூட்டணி அமைத்துள்ளார். காஜல் அகர்வால், குரு சோமசுந்தரம், ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த் ஆகியோர் இப்படத்தில் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர்.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து பல அரிய புகைப்படங்கள் கசிந்து படக்குழுவை டென்ஷன் ஆக்கி உள்ளது.

இந்தியன் 2 படத்தில் பணியாற்றுவது குறித்து மனம் திறந்துள்ள நடிகை ரகுல் பரீத் சிங், கமல் அவர்கள் 10 மணி ஷாட்க்கு அதிகாலை 5 மணிக்கே வந்து விடுவார் என்றும் கூறி உள்ளார்.

60 ஆண்டுகள் சினிமாவில் இருந்த அவருக்கு மட்டுமே சினிமாவை பற்றி முழுவதும் தெரியும் என்றும் கூறி தனக்கு இந்த படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பெருமிதம் அடைந்துள்ளார்.
