Mnadu News

இந்தியன் 2 படத்தில்  இணைந்த   நகைச்சுவை  பிரபலம்  யார் தெரியுமா

உலகநாயகன்  கமல்ஹாசன்  நடிப்பில் வெளிவந்த  இந்தியன்  படத்தின்  முதல்பாகம் பிரம்மாண்ட வரேவேற்பை பெற்றது. AM ரத்தினம் தயாரிப்பில்  இயக்குனர்  சங்கர் இயக்கத்தில்   உருவாக்கப்பட்ட இந்த படம்  வணிக அளவில்   பிளாக்  பஸ்டர்  கொடுத்ததோடு  மட்டும் அல்லாமல்  பல விருதுகளை  அள்ளிச் சென்றது .

Image result for shankar indian movie poster

இந்தியன் 2 படத்தில்  நடிக்கப்போவதாக   கமல் தொகுத்துவந்த பிக் பாஸ்  நிகழ்ச்சியின் போது   அறிவிப்பை  வெளியிட்டார் , மேலும்  தனது நடிப்பில்  வெளிவர உள்ள கடைசி படம்  இந்தியன் 2  என்றும் அதன் பின்னர் ,முழுநேர அரசியல்  பயணத்தில் ஈடுபடவுள்ளதாக  அவர் கூறியுள்ளதால்  ரசிகர்கள் மத்தியில்  இந்த படத்தின் எதிர்பார்ப்பு   மேலும் கூடியுள்ளது .

Related image

இந்த நிலையில்  இந்தியன் 2  படமானது ஷங்கர்  இயக்கத்தில்  ,லைக்கா நிறுவனம் தயாரிப்பில்  , காஜல் அகர்வால்  கதாநாயகியாகவும், சுசி பே  என்ற வட கொரியன் நடிகையும்  , நெடுமுடி வேணு  மற்றும் டெல்லிகணேஷ்  போன்ற  பல பிரபலம்  நடிக்க உள்ள இந்த  படத்தில்  மேலும்  ஒருவர்  கைக்கோர்த்துள்ளது .

Image result for indian 2 poster

சமீபத்தில் வெளியாக உள்ள  எல் .கே .ஜி  படத்தின் கதாநாயகன்  ஆர் .ஜே பாலாஜி  தான் அவர். இவரும் அரசியல்  கருத்தை  கொண்டு  படம் எடுத்ததாலே  இந்தியன் 2   படத்தில்  இவருக்கு வாய்ப்பு கிடைத்தது என்றே கருதலாம் .

Image result for lkg poster

இதை உறுதிப்படுத்தும்  வகையில்  தகவல்கள்  அதிகார பூர்வமாக  வெளிவந்தால் கமல் மற்றும் சங்கர்  படத்தில் முதல் முறையாக ஆர்.ஜே.பாலாஜி  நடிப்பார் என்பது குறிப்பிடத்தகுந்தது .

இந்த வருடம்  படப்பிடிப்பை தொடங்கியுள்ள இந்தியன் 2  படம்  2019  யில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Share this post with your friends