Mnadu News

இந்தியன் 2 ரீலீஸ் பற்றி வெளியான சுவாரஸ்ய தகவல்!

1996 ஆம் ஆண்டு வெளியாகி மிக பெரிய வெற்றியை பதிவு செய்த படம் இந்தியன். ஊழலை தடுக்க போராடும் ஒரு வீரனின் கதையை பதிவு செய்திருப்பார் இயக்குனர் ஷங்கர்.

மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில், சுகன்யா, கஸ்தூரி என பல நல்ல நடிகர்கள் கூட்டணியில் படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்து வசூலை வாரிக் குவித்தது. அன்றைய தேதியில் 50 கோடிகள் வரை வசூலை ஈட்டிய படம் அது.

2019 ஆம் ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்குவது உறுதி ஆனது. அதற்கான முதல் தோற்றமும் வெளியானது. ஆனால், படம் துவங்கிய நாளில் இருந்து பல பிரச்சினைகளை சந்தித்து வந்த படக்குழு 2022 ஆம் ஆண்டில் ஷூட்டிங் இல் வேகமெடுத்து வருகிறது.

ஜூன் மாதம் ஒரு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது கமல் பிக் பாஸ் ஷூட்டிங் இல் பிஸியாக உள்ளதால், இந்தியன் 2 ஷூட்டிங் ஒரு மாதம் கழித்து துவங்கப்படும் என படக்குழு அறிவித்து உள்ளது. அதே நேரத்தில் ராம் சரண் படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர்.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் வெளியீடு குறித்த தகவல் கசிந்துள்ளது. அடுத்த வருட தீபாவளிக்கு இப்படம் ரீலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல ராம் சரண் படத்தையும் விரைவில் முடித்து திரைக்கு கொண்டு வர ஷங்கர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

Share this post with your friends