Mnadu News

இந்தியாவின் வளர்ச்சிக்கு நல்ல நிர்வாகம் அவசியம்: பிரதமர் மோடி அறிவுறுத்தல்.

சிவில் சர்வீஸ் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு விருது வழங்கி பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் வளர்ச்சிக்கு அதிகாரிகளே பொறுப்பு.அதோடு, உங்களின் துடிப்பான பங்களிப்பு இல்லாமல், இந்தியாவின் வேகமான வளர்ச்சி சாத்தியம் கிடையாது.அதே நேரம், இந்தியா மீதான சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பு, அதிகரித்து உள்ளது.அத்துடன், இந்தியாவிற்கான நேரம் வந்துவிட்டதாக சொல்கிறார்கள்.இதன் காரணமாக, வளர்ச்சிக்கு நல்ல நிர்வாகம் அத்தியாவசியம் ஆகிறது.அதனால் தான் அதிகாரத்துறையில் சீர்திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.அதே சமயம், டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.அதோடு, மலிவான டேட்டா வழங்குவதிலும் முன்னணியில் இருக்கிறோம்.இதனால் கிராமப்புற பொருளாதாரத்திலும் மாற்றம் கண்டுள்ளது.முந்தைய நிர்வாகத்தின் காரணமாக, 4 கோடி போலி காஸ் இணைப்புகள்,4 கோடி போலி ரேஷன்கார்டுகள் இருந்தன.அது மட்டும் இன்றி,சிறுபான்மையினர் அமைச்சகம் 30 லட்சம் இளைஞர்களுக்கு போலியாக மானியம் வழங்கியது என்று பேசி உள்ளார்.

Share this post with your friends