2020 ஆம் ஆண்டு துவங்கிய கொரோனா தொற்று பாதிப்பு இன்று வரை ஓய்ந்தபாடில்லை. இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு ஐந்தாயிரதுக்கு கீழ் பதிவாகி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,275 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்று 4 கோடியே 45 லட்சத்து 83 ஆயிரத்து 365 பேரை பாதித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 4,480 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 40,750 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரையில் 4 கோடியே 40 லட்சத்து 13 ஆயிரத்து 997 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். கொரோனா பலி எண்ணிக்கை சற்று அதிகரித்து 27ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை இந்த தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 611 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 21 கோடி 81 லட்சம் ஆகும் நேற்று ஒரே நாளில் 21,63,248 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் என மத்திய சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.