Mnadu News

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவா?

உலகமெங்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,23,997 ஆக உயர்ந்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி சிகிச்சையில் இருந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 583 ஆக குறைந்துள்ளது. தொற்றால் இன்று மற்றும் பத்து பேர் உயிரிழந்தனர்.

கொரோனவால் இதுவரை 5 லட்சத்து 28 ஆயிரத்து 857 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மூன்று பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,68,557 ஆக உள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 98% ஆக உயர்ந்துள்ளது.

வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் தற்போது 1% ஆக உள்ளது. நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 2,19,21,33,244 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் மட்டும் 5,93,963 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends