Mnadu News

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைவா? அறிக்கை சொல்வது என்ன?

தினசரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்த விவரத்தை இன்று காலை வெளியிட்டது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

120 நாட்களுக்கு பிறகு இன்றே குறைந்த பாதிப்பாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 75 ஆயிரத்து 473 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 40 லட்சத்து 4 ஆயிரத்து 553 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 37 ஆயிரத்து 220 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 565 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 217 கோடியே 82 லட்சத்து 43 ஆயிரத்து 970 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டு உள்ளது.

Share this post with your friends