மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 60 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 30 ஆயிரத்து 888 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 824 ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து இன்று ஆயிரத்து 841 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 13 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More