செஸ் போட்டிகளில் கிராண்ட்மாஸ்டர் என்ற உயரிய நிலையை எட்டுவதற்கு குறிப்பிட்ட தரவரிசை ரேட்டிங் புள்ளியை கடக்க வேண்டும்.

அந்த வகையில் கொல்கத்தாவைச் சேர்ந்த 19 வயதான செஸ் வீரர் கோஸ்தாவ் சட்டர்ஜி இந்தியாவின் 78 வது கிராண்ட்மாஸ்டர் என்ற பட்டத்துக்கு உரியவராக மாறி உள்ளார்.

59 வது தேசிய சீனியர் செஸ் சாம்பியன்ஷிப்பில் மித்ரபாவுக்கு எதிரான ஆட்டத்தில் போராடி டிரா செய்ததன் மூலம் கிராண்ட்மாஸ்டருக்குரிய கடைசி தகுதி நிலையை அவர் எட்டினார். மேற்கு வங்காளத்தில் இருந்து உருவெடுத்த 10 வது கிராண்ட்மாஸ்டர் என்ற சிறப்பையும் அவர் தட்டி சென்றுள்ளார்.