Mnadu News

இந்தியா – ஜப்பான் இடையே ராணுவ கூட்டுப்பயிற்சி தொடக்கம்

இந்தியா – ஜப்பான் ராணுவம் இடையேயான வருடாந்திர கூட்டு ராணுவ ஒத்திகைப் பயிற்சி இன்று(பிப்.25) தொடங்கியது.

ராஜஸ்தானின் மஹாஜன் மைதானத்தில் 2 வாரம் நடைபெறும் இந்த ராணுவப் பயிற்சியில், இரு நாடுகளிருந்தும் 40 வீரர்கள் வீதம் மொத்தம் 80 வீரர்கள் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா – ஜப்பான் ஒத்துழைப்பின் ஒருபகுதியாக இந்த ராணுவப் பயிற்சி ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த முறை ஜப்பானில் நடைபெற்ற இந்த ஒத்திகைப் பயிற்சி இம்முறை இந்தியாவில் நடைபெறுகிறது.

இருநாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாக உள்ளது. இந்நிகழ்வின் ஒருபகுதியாக, ராணுவ ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை காட்சிப்படுத்தும் கண்காட்சியும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More