ஐக்கிய நாடுகள் சபையின் 77 வது ஆண்டுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவ் பேட்டியளித்தார்.
பாதுகாப்புக் கவுன்சிலில் இணைய இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் பல காலங்களாக முயற்சித்து வருகின்றது. இந்நிலையில், நிரந்தர உறுப்பினராக முழு தகுதி இந்த இரண்டு நாடுகளுக்கும் உண்டு என்று கூறி ரஷ்யா தமது முழு ஆதரவை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
இதில் பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா, அமேரிக்கா ஆகிய நாடுகள் ஐ.நா.சபையில் நிரந்தர உறுப்பினராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.