எட்டாவது சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் வருகிற 16 அன்று துவங்குகிறது. இதில் பதினாறு அணிகள் பங்கேற்கின்றன.
இதில் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் கால்பதிக்கும் இந்திய அணி, 23 ஆம் தேதி தனது தொடக்க ஆட்டத்தில் வருகிற பாகிஸ்தானுடன் மோத உள்ளது.
இந்நிலையில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் உலகக்கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளை ஐநாக்ஸ் திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஐநாக்ஸ் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி நாடு முழுவதும் 25 க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நேரலையாக திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களை ஆவலில் திக்கு முக்காட செய்துள்ளது.