உலக பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதில் இந்திய பணக்காரர்களில் ரிலையன்ஸ் இண்டஸ்டீரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ. 7 லட்சத்து 82 ஆயிரம் கோடி ஆகும். உலக அளவில் 15-வது இடத்தில் உள்ளார். அதானி குழும தலைவர் கவுதம் அதானி ரூ.5.99 லட்சம் கோடியுடன் 2-வது இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் எச்.சி.எல். நிறுவன தலைவர் ஷிவ் நாடார் ரூ.2.58 லட்சம் கோடி சொத்துடன் உள்ளார். 4-வது இடத்தில் சாவித்திரி ஜிண்டால் (ரூ.2.40 லட்சம் கோடி), 5-வது இடத்தில் சைரஸ் பூனாவாலா (ரூ.1.83 லட்சம் கோடி), 6-வது இடத்தில் திலிப் ஷாங்வி (ரூ.1.66 லட்சம் கோடி), 7-வது இடத்தில் குமார் பிர்லா (ரூ.1.55 லட்சம் கோடி) 8-வது இடத்தில் ராதாகிருஷ்ணன் தாமணி (ரூ.1.49 லட்சம் கோடி), 9-வது இடத்தில் லட்சுமி மிட்டல் (ரூ.1.36 லட்சம் கோடி), 10-வது இடத்தில் குஷல் பால்சிங் (ரூ.1.25 லட்சம் கோடி) உள்ளனர்.
நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி...
Read More