Mnadu News

இந்திய பொருட்களுக்கு உலகளவில் தேவை அதிகரிப்பு: பிரதமர் மோடி பேச்சு.

இந்திய கூட்டுறவு சங்கத்தின் 17 வது மாநாட்டில் பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோடி,பிரதமர் கிஷான் திட்டத்தின் கீழ், இடைத்தரகர்கள் தலையீடு இன்றி, கோடிக்கணக்கான சிறு விவசாயிகள் பலனடைந்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில், இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி நேரடியாக செலுத்தப்பட்டு உள்ளது. 2014க்கு முன்பு, விவசாயத்துறையில் 5 ஆண்டுகளில், ஒரே திட்டத்திற்கு மட்டும் 90 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டது. தற்போது, நாம் அதனை கடந்து விட்டோம். பிரதமர் கிஷான் சமான் நிதி திட்டத்தில், இதனை விட 3 மடங்கு நிதி செலவு செய்யப்பட்டு உள்ளது. இந்திய விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம் கிடைக்கிறது.அதே வேளையில், பால் பவுடர் முதல் நெய்வரை இந்திய பொருட்களுக்கு உலகளவில் தேவை அதிகரித்து உள்ளது. சிறு தானியங்களுக்கு புதிய சந்தை உருவாகி உள்ளது. இதன் மூலம் சிறு விவசாயிகள் பலன் பெற முடியும். ஏற்றுமதியை அதிகரிக்க கவனம் செலுத்தி வருகிறோம். அரிசி மற்றும் கோதுமையில் இந்தியா மட்டுமே தன்னிறைவு பெற்றுள்ளது என்று பேசியுள்ளார்.

Share this post with your friends