Mnadu News

இந்திய பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது: நிர்மலா சீதாராமன் பேச்சு.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆறு நாள்கள் அரசு முறை பயணமாக மத்திய நிதியமைச்சர் நிர்மாலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு மத்திய வாஷிங்டன் ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தில் “இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் பேசிய அவர், இந்த நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சுமார் 7 சதவீதமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.அதோடு, எதிர்காலத்தில் இந்தியப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று எரிசக்தியின் விலை மற்றும் கிடைக்கும் தன்மையில் உள்ள சிரமம், மின்சாரம், உரத்தின் விலை உயர்வு மற்றும் அவை கிடைப்பதில் உள்ள சிரமம். நாட்டில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் இந்தியா உள்பட பல நாடுகளுக்கான வளர்ச்சி கணிப்புகள் குறைவாகவே திருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 2022 இல், உக்ரைன்-ரஷியா தாக்குதலுக்கு பிறகு, உள்நாட்டில் உணவு மற்றும் எரிபொருள் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டது. வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், வாங்கும் சக்தி குறையாமல் இருப்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டியிருந்தது. அப்போது, சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரிகளை குறைத்தோம் மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரிகளை குறைத்தோம். பணவீக்கம் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய மத்திய வங்கி விரைவாக செயல்பட்டது. இந்த காலகட்டங்களில் பல சிக்கலான சவால்களை நாங்கள் பல்வேறு தலையீடுகள் மூலம் எதிர்கொண்டோம் என்றார். ரூபாய் நாணயத்தை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்க இந்தியா பல நாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளது என்று கூறிய அவர்,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசின் நோக்கம் நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் வலுவானதாக மாற்றுவதாகும். அதற்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பு, நிதி உள்ளடக்கம் உள்ளிட்டவை தயாராக உள்ளது என நிர்மலா சீதாராமன் கூறினார். இதனிடையே, அமெரிக்க நிதியமைச்சர் ஜேனட் எல்லனுடன் நேற்று நடந்த விவாதத்தில், இரு நாடுகளின் பரஸ்பர நலன்கள் மற்றும் தற்போதைய உலகளாவிய பொருளாதார நிலைமை குறித்து பேசப்பட்டது.
இந்த சந்திப்பின் போது, நவம்பர் மாதம் 11-ஆம் தேதி புது டெல்லியில் நடைபெறும் அமெரிக்க-இந்தியா பொருளாதார மற்றும் நிதிக் கூட்டாண்மை கூட்டத்தில் கலந்து கொள்ள இந்தியாவிற்கு வருமாறு ஜேனட் எல்லனுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்துள்ளார்.

Share this post with your friends