ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் கம்பாலா நகரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மேலாளராக 39 வயதான இந்தியரான உத்தம் பந்தாரி வேலை செய்து வந்தார். இதனிடையே, இந்த நிநி நிறுவனத்தில் 30 வயதான இவான் வெப்வயர் என்ற போலீஸ்காரர் 46 ஆயிரம் ரூபாய்க்கு கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில், கடன் தொகை தொடர்பாக மேலாளருக்கும்;, போலீஸ்காருக்கும்; இடையே வாக்குவாதம் நடந்தது.அப்போது, திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் மேலாளரை போலீஸ்காரர் சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் மேலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸ்காரர் வெப்வயரை கைது செய்தனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More