Mnadu News

இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவு.

இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மீண்டும்; 38 காசுகள் சரிந்து ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82 ரூபாய் 68 பைசா ஆக உள்ளது. அமெரிக்க டாலரின் தேவை உலகம் முழுவதும் அதிகரித்திருப்பதே இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதால், இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிகப்படியான பணத்தை இறக்குமதி நிறுவனங்கள் செலவிட நேரிடும். இதனால் செல்லிடப்பேசி உள்ளிட்ட பல பொருள்களின் விலை அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Share this post with your friends