Mnadu News

இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம் சட்டப் பேரவையில் நிறைவேற்றம்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழி நாடாளுமன்றக் குழு, குடியரசுத் தலைவருக்கு கடந்த வாரம் ஒர் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியை இடம்பெறச் செய்ய வேண்டுமென்றும் பரிந்துரை செய்து உள்ளதாக தகவல் வெளியானது. இந்த அறிக்கைக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த பரிந்துரைகள் தொடர்பாக இன்றைய சட்டப் பேரவை கூட்டத் தொடரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். முதல்-அமைச்சர்; தாக்கல் செய்த தீர்மானம் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

Share this post with your friends