மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருக்கிறார். அதன்படி, அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸம் பிரதமர் மோடியும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.இந்தச் சந்திப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நானும், ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானிஸ{ம் முந்தைய எங்கள் சந்திப்புகளில் ஆஸ்திரேலியாவில் நடந்த இந்து கோயில்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும், பிரிவினைவாத சக்திகளின் செயல்பாடுகள் குறித்தும் விவாதித்திருக்கிறோம், தற்போதும் விவாதித்தோம். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அல்பானிஸ் மீண்டும் என்னிடம் உறுதியளித்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More