இந்தோனேசியா நாட்டின் ஏராளமான தீவுகளில் குபங்க் தீவும் ஒன்றாகும். நேற்று காலையில் சுமார் 230 பயணிகளுடன் ஒரு கப்பல் புறப்பட்டது குபங்க் தீவில் இருந்து கலபாஹி தீவுக்கு புறப்பட்டது.
அந்த கப்பலில் மாலுமிகளுடன் சேர்த்து மொத்தம் 240 பேர் பயணம் செய்தனர். அந்த கப்பல் கடலில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கப்பலில் தீப்பிடித்து மளமளவென கப்பல் முழுவதும் பரவி பற்றி எரிந்தது.
இந்த தீ விபத்து குறித்து மாலுமிகள் உடனடியாக பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் மீட்பு கப்பலில் விரைந்து வந்து தீவிபத்து ஏற்பட்ட கப்பலில் இருந்த பயணிகளை மீட்டனர்.
ஆனபோதும் இதில் 14 பயணிகள் தீயில் உடல் கருகி பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் இந்தோனேசியாவில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.