Mnadu News

இந்தோனேசிய உலக அழகி போட்டி! பரபரப்பு கிளப்பிய பாலியல் குற்றச்சாட்டு?

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவில் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3 வரை மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி நடைபெற்றது. 3, ஆண்கள் உட்பட 20 பேருக்கு மேல் உள்ள அறையில் உடல் பரிசோதனை என்ற பெயரில் மேலாடையின்றி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக 6 போட்டியாளர்கள் குற்றம் சாட்டி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

ஆகஸ்ட் 3 ஆம் தேதி இறுதிப் போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு “உடல் சோதனை” மற்றும் புகைப்படங்களுக்காக போட்டியாளர்கள் தங்கள் மேலாடைகளை கழற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர் என்று அவர்களின் வழக்கறிஞர் ஒருவர் கூறி உள்ளார்.

போட்டி அமைப்பாளர்கள், போட்டியாளர்களின் உடலில் ஏதேனும் தழும்புகள், செல்லுலைட் அல்லது பச்சை குத்தப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்” என்று கூறியதாக கூறப்படுகிறது.

இது தன்னை மனரீதியாக பாதித்துள்ளது என்றும், தன்னால் தூங்க முடியவில்லை என்று அழகி ஒருவர் கூறி உள்ளார். மேலும், உள்ளூர் தொலைக்காட்சி அவர்களின் அடையாளங்களைப் பாதுகாக்க ஒளிபரப்பும்போது அவர்களின் முகங்களை மங்கலாக்கியது. தலைநகர் ஜகார்தாவில் உள்ள போலீசார் மேலும் விசாரணை நடத்துவதாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர். அதோடு, மிஸ் யுனிவெர்ஸ் போட்டியை நடத்தும் குழுவும் விசாரிக்கும் எனவும் தெரிவித்து உள்ளது.

Share this post with your friends