Mnadu News

இன்றும் நாளையும் மிக கனமழை: வெதர்மேன் எச்சரிக்கை.

தமிழகத்தில் கடந்த 29 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகின்றது. பல்வேறு மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையமும் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வெதர்மேன் வெளியிட்டுள்ள செய்தியில்,
தமிழக எல்லைப் பகுதியை மழை அடைந்துவிட்டது. இனிவரும் நாள்களில் படிப்படியாக மழை அதிகரிக்கும். சென்னைப் பகுதியை மேகக்கூட்டங்கள் அடைந்துவிட்டதால் மழை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அலுவலகத்திலிற்கு செல்லும்நேரமும், திரும்பும்நேரமும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல், வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளான நாகை, கடலூர், காரைக்கால், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகள் நாளைவரை மழைக்கு வாய்ப்புள்ளது. தென் கேரளம் மற்றும் கன்னியாகுமரியிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் பகுதிகளில் நாளை மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends