Mnadu News

இன்று மாலை வெளியாகிறது “சர்தார்” பட பாடல்கள்!

பி. எஸ் மித்ரன் இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிறது என்றால் அது நிச்சயம் சமூகம் சார்ந்த அக்கறை கொண்ட கதைகளமாகவே இருக்கும். அப்படி உருவாகி உள்ள படம் தான் “சர்தார்”.

கார்த்தி, ராஷிகண்ணா, சிம்ரன், ஜங்கி ஃபாண்டே, ரஜிஷா விஜயன், முரளி ஷர்மா, முனீஷ்காந்த் ஆகியோர் இணைந்து இந்த படத்தை கொடுத்துள்ளனர். ஜி வி பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

ஏற்கனவே படத்தின் டிரெய்லர், ஃபர்ஸ்ட் சிங்கிள் என அனைத்தும் கவனம் பெற்ற நிலையில், இன்று மாலை படத்தின் அனைத்து பாடல்களையும் படக்குழு வெளியிட உள்ளது. கதைக்கு ஏற்ற பாடல்களே இருக்கும் என இயக்குநர் தெரிவித்து உள்ளார்.

Share this post with your friends