நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல மொழி நட்சத்திர நடிகர்கள் நடிப்பில் உருவாகி ரிலீஸ்ஸுக்கு தயாராகி உள்ளது “ஜெயிலர்”. ஆம், இதில் மோகன்லால், சிவராஜ்குமார் ,ஜாக்கி ஷராப், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்
பீஸ்ட் பட தோல்விக்கு பிறகு நெல்சன் எப்படி ரஜினிகாந்தை கையாள போகிறார் என்கிற பயமும் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், தோல்விகளை தூக்கி ஓரம் வைத்து விட்டு “ஜெயிலர்” படத்தை நாம் வெற்றி படமாக்குவோம் என ரஜினி சொல்ல, பின்னர் கடுமையான உழைப்பில் உருவானது தான் இந்த “ஜெயிலர்”. இதில், முத்துவேல் பாண்டியன் என்கிற ரோலில் ஜெயிலராக நடித்துள்ளார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது முதல் படத்துக்கு எதிர்பார்ப்பு உச்சம் தொட துவங்கியது. அதுவும் ஒவ்வொரு வாரமும் மிராட்டலான ஸ்டார் நடிகர்கள் படத்தில் பணியற்றுகின்றனர் என்கிற அறிவிப்பு ரசிகர்களை இன்னும் பரவசம் அடைய வைத்தது. மேலும், ரஜினியின் கேரக்டர் அறிமுக முன்னோட்ட வீடியோ வெளியாகி இன்னும் நம்பிக்கை அளித்தது. பின்னர் ஒவ்வொரு தகவல்களும் வேற மாதிரி படம் உருவாகி உள்ளது என்பதை காண்பித்தது.
இதற்கெல்லாம் ஒரு சிறந்த சான்றாக வெளியான முதல் பாடலான “காவாலா” அமைந்தது. ஆம், பட்டி தொட்டி எங்கும் இதன் ரீச் ஏக போகம்.
குறிப்பாக, தமன்னா நடனம், அனிருத் இசை, அருண் ராஜா வரிகள், ஷில்பா ராவ் குரல் என எல்லா தரப்பு மக்களையும் இப்பாடல் கவர்ந்து உள்ளது. தற்போது இப்பாடல் 70 மில்லியன் பார்வைகளை கடந்து உள்ளதாக சன் பிக்சர்ஸ் டிவிட்டரில் அறிவித்து உள்ளது. இதை தலைவர் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், இதன் பின்னர் வந்த “ஹுகும்” பாடலும் பல சர்ச்சைகளை சந்தித்தாலும், மாபெரும் வைரல் ஹிட் அடித்து உள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை ஆறு மணிக்கு படக்குழு மூன்றாவது பாடலான “ஜுஜுபீ” என்கிற பாடல், சூப்பர் சுப்பு வரிகளில் வெளியாக உள்ளது. அதே போல “ஜெயிலர்” இசை வெளியீட்டு விழா வரும் 28 அன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.