Mnadu News

இபிஎஸ் கைது; அதிமுகவினர் சாலை மறியல்

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலாக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பு கோரிக்கையை முன்வைத்தது. மேலும் சட்டப்பேரவை எதிர்கட்சித் துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்காததை கண்டித்து தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் சென்னை வள்ளுவா் கோட்டத்தில் இன்று நடைபெறும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்திருந்தது.

அதன் படி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறையினரின் தடையை மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் ,முன்னாள் அமைச்சர்கள்,சென்னை மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கறுப்பு சட்டை அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் அறிவுறுத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்ததால் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அவரது ஆதரவு எம்எல்ஏக்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தேரடி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், அதிமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் அதிமுகவினரை போலீசார் அதிரடியாக கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

Share this post with your friends