Mnadu News

இப்படி கூட இருக்கிறதா என வியக்கவைக்கும் பத்து ஃபோபியா

உணவினை விழுங்குவதற்கு பயமா? பீனட் பட்டர் சாப்பிடுவதற்கு பயமா? காய்கறி சாக்லேட் சாப்பிடுவதற்கு கூட பயமா? உறவினர் வீட்டிற்கு வந்தால் பயமா? நீளமான வார்த்தைக்கு பயமா?

சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் பயப்படுவதையே ஃபோபியா என்பர். இயற்கைக்கு மாறான பயத்தையே ஃபோபியா என்று கூறுவர். ஃபோபியா உள்ளவர்களுக்கு சாதாரணமாக பயப்படுபவர்களைக் காட்டிலும், அதிக ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பார்கள். சொல்லப்போனால் ஃபோபியாவை ஒரு மனநோய் என்று கூட கூறலாம். இப்படிப்பட்ட ஃபோபியாவில் நம்மை ஆச்சரியப்பட வைக்கும் படியான சில விசித்திரமான ஃபோபியாக்களும் உள்ளன. அந்த ஃபோபியாக்கள் என்னவென்று பார்க்கலாம்.

1. பிஸுடொட்யஸ்பிஹாஜியா (Pseudodysphagia)

இந்த ஃபோபியாவின் பெயர் எப்படி நம் வாயில் நுழையவில்லையோ, அதே போல் இந்த ஃபோபியா உள்ளவர்களுக்கும் எதையும் விழுங்குவதற்கு பயம் இருக்கும். சாப்பிடும் போதும் நன்றாக மென்று சாப்பிடவேண்டும் என்று கவனமாக இருப்பார்கள். இந்த ஃபோபியா உள்ள பெரும்பாலானோர் மிகவும் எடை குறைந்து காணப்படுவதோடு, ஊட்டச்சத்து குறைபாட்டுடனும் இருப்பர். இதற்கு பிரத்தியோகமாக எந்த சிகிச்சையும் இல்லை.

2. அரசிப்புட்டிரோபோபியா (Arachibutyrophobia)

அரசிப்புட்டிரோபோபியாவானது வேர்க்கடலை வெண்ணெய் அதாவது பீனட் பட்டர் (Peanut Butter) குறித்த அச்சமாகும். வெண்ணெயை சாப்பிட்டால், வாயின் மேல் பகுதியில் ஒட்டிக் கொள்ளும் என்று அச்சம் கொள்பவர்களைக் குறிக்கும். இந்த ஃபோபியா உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். ஆனால் இப்படியும் ஒரு ஃபோபியா உலகில் இருக்கத் தான் செய்கிறது.

3. ஹெலியோபோபியா (Heliophobia)

ஹெலியோபோபியா, சூரியனைக் கண்டு அச்சம் கொள்வதைக் குறிக்கும். இது நிச்சயம் உங்கள் ஆச்சரியத்தை உண்டாக்கலாம். நம்மில் பலரும் சூரிய ஒளியில் வெளியில் செல்வதற்கு அச்சம் கொள்ளுவோம் குறிப்பாக வெயில் காலத்தில். ஆனால் உலகில் அதிகப்படியான ஒன்று சூரிய வெளிச்சம் அதனை கண்டு அஞ்சுபவர்கலையே ஹெலியோபோபியாஎன்று அழைக்கின்றோம். இத்தகைய ஃபோபியா உள்ளவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

4. லச்சனோபோபியா (Lachanophobia)

லச்சனோபோபியா என்பது காய்கறிகள் குறித்த பயம் ஆகும். இந்த ஃபோபியா உள்ளவர்கள் காய்கறிகளை சாப்பிட விரும்பமாட்டார்கள். மேலும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க, வைட்டமின் சப்ளிமென்டுகள் மற்றும் மாத்திரைகளை எடுத்து கொள்வார்களே தவிர காய்கறிகளை எடுத்து கொள்ள மாட்டார்கள். காய்கறியில் தோற்றம் சுவை என ஏதோஒன்று வெறுப்பது குறித்த அச்சமே லச்சனோபோபியா என்று சொல்லப்படுகிறது.

5. சாக்லேட்ஃபோபியா (Xocolatophobia)

சாக்லேட்டுகளை ஒருவர் எப்படி வெறுக்க முடியும்? என்று நாம் நினைக்கலாம். ஆனால், சாக்லேட் ஃபோபியா என்பது அரிதானது ஆனால் உண்மையானது. இந்த ஃபோபியாவால்  பாதிக்கப்பட்டவர்கள் சாக்லேட் மற்றும் கோகோவை சாப்பிட விரும்புவதில்லை. சாக்லேட் ஃபோபியா உள்ளவர்கள் சாக்லேட்-ஐ விஷமாக கருதுவர். சிறிய வயதில் இது வந்திருந்தால், வயது ஆகும்போது இது குறைய வாய்ப்பு உள்ளது.

6. மாஜிரோகோபோபியா (Mageirocophobia)

மாஜிரோகோபோபியா என்றும் அழைக்கப்படும் சமையல் பயம், நேரமின்மை அல்லது சோம்பேறிகளுக்கு ஒரு மகிழ்ச்சியாக தோன்றலாம், ஆனால் உங்களின் இந்தப் பழக்கம் கவலையைத் தூண்டினால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாஜிரோகோபோபியாவால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் உணவை சமைப்பதைத் தவிர்க்கிறார்கள்.  இது கூர்மையான பொருள்களான கத்தி போன்றவை  அல்லது  சமையல் அறையில் ஏற்படும் வெப்பத்தின் பயத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

7. சோம்னிபோபியா (Somniphobia)

சோம்னிபோபியா என்பது தூக்கம் குறித்த அச்சத்தைக் ஏற்படுத்தும். அதாவது இந்த ஃபோபியா உள்ளவர்களுக்கு பயங்கரமான கனவுகள் மற்றும் தூங்கினால் மீண்டும் எழமாட்டோமோ என்ற அச்சம் இருக்கும்.சோம்னிபோபியா உள்ளவர்கள் சரியாக தூங்க மாட்டார்கள். சோம்னிபோபியாவால் பாதிக்க பட்டவர்கள் உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனையை பெற்றுக்கொள்வது அவசியம்.

8. சின்ஜெனெசோபோபியா (Syngenesophobia)

நம்மில் பலருக்கு இந்த ஃபோபியா இருக்கக்கூடும். உறவினர் வீட்டுக்கு வந்தாலே அச்சத்தில் இருப்பார்கள். இருப்பினும், சின்ஜெனெஸ்ஃபோபியா உள்ளவர்கள் தங்கள் உறவினர்களின் அதிகப்படியான பயத்தால் பாதிக்கப்படுகின்றனர். இந்த அச்சங்களுக்கு ஒரு குறிப்பிட்ட, வெளிப்படையான காரணம் இல்லாவிட்டால், இந்த பயத்தைப் போக்க உதவியை நாடுவததே சிறந்தது.இது  வலுவான குடும்ப உறவுகளை உருவாக்குவது மற்றும் நம்  ஆயுட்காலம் அதிகரிக்கவும்  உதவும் என்று ஆராய்ச்சியின் மூலம் தெரியவருகிறது.

9. நியோபோபியா (Neophobia)

புதிய விஷயங்களைப் பற்றிய பயத்தையே நியோபோபியா ஆகும். பலர் மாற்றத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருந்தாலும், நியோபோபியா என்பது அனைத்து புதிய விஷயங்களை செய்வதற்கு முன்பும் ஏற்படும் பயமே. நியோபோபியா உள்ளவர்கள்  புதிய உணவை சுகிக்க தயங்குவர். பல்வேறு ஆரோக்கியமான உணவுகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை இதன் மூலம்  இழக்கிறார்கள். நியோபோபியாவின் மன அழுத்தத்தை உண்டாக்கி ஆயுட்காலத்தை குறைக்கும் என்றும் ஆராய்ச்சியில் தெரியவருகிறது.

10.ஹிப்போபொடோமோன்ஸ்ட்ரோசெஸ்கிப்பேலியோபோபியா (Hippopotomonstrosesquippedaliophobia)

இந்த வார்த்தையை பார்த்தாலே புரியும் நீளமான வார்த்தைகளால் ஏற்படும் அச்சம். அது மட்டுமல்லாமல் அகராதியில் மிகவும் நீளமான வார்த்தை இதுவே. இந்த ஃபோபியா உள்ளவர்களுக்கு நீளமான வார்த்தையை பார்த்தால் அதிக நடுக்கம் மற்றும் பயத்தை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு இந்த ஃபோபியா இருக்குமானால்,படிப்பில் ஆர்வம்  குறையும்.

Share this post with your friends