Mnadu News

இம்ரான்கானின் பேச்சு,பேட்டியை வெளியிட தடை: பாகிஸ்தான் அரசு உத்தரவு.

பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. இதனால், பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுள்ளதை ஏற்க மறுத்து வரும் இம்ரான்கான் தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி வருகிறார். அதேபோல் தன்னை ஆட்சி பொறுப்பில் இருந்து நீக்கியதற்கு பாகிஸ்தான் முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் ஜாவித் பாஜ்வா முக்கிய காரணமாக இருப்பதாக இம்ரான் கான் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், பாகிஸ்தானின் புதிய அரசுக்கு எதிராக தனது கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-இன்சஃப் கட்சியின் ஆதரவாளர்களை திரட்டி இம்ரான்கான் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த போராட்டங்களை பாகிஸ்தான் அரசு ஒடுக்கி வருகிறது.இதற்கிடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை லாகூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான்கான் தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியதற்கு முன்னாள் ராணுவ ஜெனரல் பாஜ்வா தான் காரணம் என்று குற்றஞ்சாட்டினார். அவரது பேச்சு நாடு முழுவதும் பல்வேறு செய்தி நிறுவனங்களில் நேரடியாக ஒளிபரப்பட்டது. இவரது பேச்சை தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் வைத்து இம்ரான் கானை ஊழல் வழக்கில் கைது செய்ய போலீசார் முயற்சித்தனர். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை இம்ரான் கான் மறுத்தார். மேலும், கைது நடவடிக்கையில் இருந்து தனக்கு முன் ஜாமின் வழங்கும்படி கோர்ட்டில் அவரச வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இம்ரான்கானை போலீசார் கைது செய்ய 2 வாரங்கள் தடை விதித்தது. இந்நிலையில், இம்ரான்கானின் பேச்சு, பேட்டி உள்ளிட்டவற்றை ஒளிபரப்ப பாகிஸ்தான் செய்தி நிறுவனங்களுக்கு அந்நாட்டு தகவல் தொலைதொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது. அரசுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெறுப்பை தூண்டும் வகையில் இம்ரான்கான் பேசி வருவதாகவும் அவரது பேச்சு, பேட்டியை ஒளிபரப்பக்கூடாது என்று பாகிஸ்தான் தகவல் தொலைதொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவு அமலான 2 மணி நேரத்தில் பாகிஸ்தானின் பிரபல செய்தி நிறுவனமான எஆர்ஒய் செய்தி நிறுவனம் லாகூரில் இம்ரான்கான் பேசியதை ஒளிபரப்பு செய்தது. தடையை மீறி இம்ரான்கான் பேச்சை ஒளிபரப்பு செய்ததால் அந்த செய்தி நிறுவனத்தின் உரிமத்தை பாகிஸ்தான் தகவல் தொலைதொடர்புத்துறை ரத்து செய்தது.

Share this post with your friends