Mnadu News

இம்ரான் கான் பொதுவெளியில் தூக்கிலிடப்பட வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் பேச்சால் சர்ச்சை.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராஜா ரியாஸ் அகமது கான் , “நாடு முழுவதும் கலவர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இம்ரான் கானின் ஆதரவாளர்களின் செயலை கண்டு இந்த நாடு அவமானம் கொள்கிறது. இம்ரான் கான் பொதுவெளியில் தூக்கிலிப்பட வேண்டும். ஆனால், நீதிமன்றம் அவரை மருமகனை போல் வரவேற்கிறது. இந்த யூத ஏஜெண்டுடன், நீதிபதிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால், அவர்கள் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியிலே சேரட்டும். அந்தக் கட்சியில் சில பதவிகள் காலியாக உள்ளன. இந்த நீதிபதிகள் அந்த பதவிக்காக சண்டையிடலாம். இவர்களுக்கு பதில் ஏழைகளுக்கு நீதி அளிக்கும் நீதிபதிகள் வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.இவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Share this post with your friends