தமிழ்த்திரையுலகில் இருக்கும் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பா.ரஞ்சித் கபாலி, காலா என அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கினார். இதனை தொடர்ந்து சமீபத்தில் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை தனது நீலம் புரொடக்ஷன் நிறுவனம் மூலம் தயாரித்தார்.
இந்த படத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து பிர்சா முண்டா என்ற பழங்குடியின சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்க திட்டமிட்டுயிருந்தார்.
இந்நிலையில், இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கும் படத்தை தனது நீலம் புரொடக்ஷன் நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளார். நடிகர் கலையரசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் மற்ற முக்கிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.